அம்மா கொலையானது தெரியாமல் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்த மகள்.. ஆம்புலன்ஸை கட்டி பிடித்து கதறல்
திருவாடானை அருகே விபத்தில் உயிரிழந்த மகனின் காப்பீடு பணத்தை தர மறுத்த மனைவியை, கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்தவர் மகாதேவி. இவருக்கு குமார் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உட்பட இரண்டு மகள்கள் இருந்த நிலையில், மகன் லோகநாதன் கடந்தாண்டு சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார். விபத்தில் உயிரிழந்த மகனின் காப்பீடு பணம் சில நாட்களுக்கு முன்பு, மகாதேவியின் வங்கிக் கணக்கி வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்த குமார், இதையறிந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், மனைவியிடம் காப்பீடு பணத்தை கேட்டு தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே, பணம் தர மறுத்த மனைவியை குமார் அடித்துக் கொன்ற சம்பவம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, போலீசில் தகவல் தெரிவித்து சரண் அடைந்த குமாரை, போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மகாதேவியின் மகள், தாய் இறந்த சம்பவமறிந்து துடித்து போய் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.