Work From Home மோகம்-நம்புங்க நம்புங்கனு சொல்லி ஒரே மெசேஜில் ஷாக் கொடுத்த குரூப்-உஷாரய்யா உஷாரு..

Update: 2023-11-08 04:05 GMT

சென்னை புழலை அடுத்த புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் பாபு ஆனந்த். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாபு ஆனந்த், 4 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் தனது மனைவி இறந்தபின், மன உளைச்சலில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனிடையே, work from home, part time based online jobs என வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் வகையில் பாபு ஆனந்த் இணையத்தில் வேலை தேடி வந்தார். அப்போது, வேலை தொடர்பாக, டெலிகிராம் சாட் வழியாக வந்த மெசேஜை வைத்து, வேலை குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. அதில், பணம் கொடுத்து ஏதாவது வீட்டு உபயோக பொருளை வாங்க வேண்டும் என்றும், ஆனால் அந்தப் பொருள் கையில் தரப்படமாட்டாது எனவும் கூறப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக இந்த திட்ட முடிவில் முதலீடு செய்யப்பட்ட பணமும், அதற்கான கமிஷன் தொகையும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய பாபு ஆனந்த், முதலில் 100 ரூபாய் செலுத்தி விவரங்களை பதிவு செய்ய, அதற்கான ஊதியம் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்