சேலம் மாவட்டம் உடையபட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கும், ஆத்தூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ள அந்த இளம்பெண், கணவர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பல ஆண்களிடம் விலைபேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். உறவினர்களுக்கு தெரிந்து விட்டதால் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கணவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.