விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மனம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஓம் சக்தி
நகரில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால்
அங்கு வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர் கனமழையின்
காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும்
அதன்கிளையான துறிஞ்சில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அவற்றில்
இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த
குடியிருப்புகள் வழியே செல்வதால்
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம்
தங்களுக்கு உதவ வேண்டும் என்று
அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.