கொங்குவையும் பதம் பார்த்த பேய் மழை... மிதக்கும் சேலம்... சீறும் வெள்ளம்; பரபரப்பு மீட்ட காட்சி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி பகுதியில், சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாக வீட்டை சூழ்ந்த மழை நீரிலிருந்து 10க்கும் மேற்பட்ட பொது மக்களை, தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர். பாதுகாப்பு உபகரணங்களுடன் அங்கிருந்த மூதாட்டி, சிறுவர்கள் மற்றும் பொது மக்களை மீட்டனர்.
அவர்கள் வைத்திருந்த மாடு கன்று குட்டி ஆகியவைகளையும் மீட்டு, மேடான பகுதிக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.