ஸ்தம்பித்த திருவண்ணாமலை... கனமழையால் பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழை நீர்..! | Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையினால், பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும், மழை நீரை அப்புறப்படுத்தி பள்ளிக்கு செல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோருகின்றனர்.