``நீதிமன்றம் பணக்காரர்களுக்கே.. என்ற எண்ணம் ஆபத்தானது..'' உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கருத்து
பணம் இருந்தால் தான் நீதிமன்றத்திற்கு போகலாம் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவி வருவது மிகவும் ஆபத்தானது என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம்- நீதித்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நீதிபதி சுந்தர், நீதி எல்லோருக்கும் பொதுவானது என்று தெரிவித்தார்.