பெண் வங்கி ஊழியர் தற்கொலை- உறவினர்கள் போராட்டம்
திருவண்ணாமலையில் திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன தனியார் பெண் வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியில் வேலை பார்த்து வந்த ஆனந்தி, வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், ஆனந்தியின் மரணத்திற்கு, கணவர் சீனிவாசனும் மாமியாரும் கொடுமை படுத்தியது தான் காரணம் என குற்றம் சாட்டிய ஆனந்தியின் தந்தை, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் கணவர் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
