ஜப்பான் வரை கிழிந்த விசில்- தமிழ் ரசிகர்களை விஞ்சிய கேரள தோழிஸ்... மலையாள கரையில் முரட்டு சம்பவம்

Update: 2024-09-05 15:10 GMT

விஜய்யின் தி கோட் திரைப்படத்தை, காண சென்ற ரசிகர்கள் பலர் வித்தியாசமான அட்ராசிட்டியில் ஈடுபட்ட சுவாரஸ்ய செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திரையரங்கையே ஒரு வழி செய்யும் விஜய் ரசிகர்கள், இம்முறையும் பல திரும்பி பார்க்க வைக்கும் சம்பவங்களை செய்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை காசி திரையரங்கில் படம் பார்க்க வந்த புதுமணத் தம்பதி இருவர், நடிகர் விஜய்யின் பேனர் முன்பாக மாலை மாற்றிக் கொண்டு படம் பார்க்கச் சென்றனர்...

ஆயிரம் பேருக்கு தலைவாழை இலை போட்டு விருந்து

காஞ்சிபுரத்தில் தி கோட் திரைப்படத்தை பார்த்து விட்டு வரும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தே வழங்கப்பட்டது..

ஆயிரம் பேருக்கு தலைவாழை இலை போட்டு விருந்தளிக்கும் வகையில் 200 கிலோ சிக்கன் பிரியாணி, முட்டை, கேசரி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன..

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள திரையரங்கில், ஜப்பானிய ரசிகைகள் இருவர் GOAT என பெயர் பொறிக்கப்பட்ட 5 kg எடை கொண்ட கேக் வெட்டி நடிகர் விஜயின் பட பாடலையும் பாடி அசத்தினர்.. அப்போது சாலையை மறித்துக் கொண்டு ரசிகர்கள் செய்த செயலால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடிய நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய்யின் பெண் ரசிகர் மன்றத்தினர், ஒரு தியேட்டரையே புக் செய்து அதகளப்படுத்தியுள்ளனர்.

செண்டை மேளம் முழங்க ரசிகர்களை வரவேற்று, பெண்களுக்கென டிக்கெட்டுகளை விற்பனை செய்து அசத்தியுள்ளனர்.

தியேட்டர் முழுக்க ரசிகர்கள் கொண்டாட்டங்கள் களை கட்டி வரும் நிலையில் படம் குறித்த விமர்சனமும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.. 

Tags:    

மேலும் செய்திகள்