"துணைவேந்தரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" கல்லூரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் | Salem

Update: 2024-01-11 04:21 GMT

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்படுத்த வலியுறுத்தி, அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் இணைந்த பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழுவினர் வாயில் முழக்கப் போராட்டத்தை நடத்தினர். அப்போது, முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே இருக்கும் துணைவேந்தர் ஜெகநாதன், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீடிப்பது சரியல்ல என்று அவர்கள் கூறினார். நேர்மையான விசாரணை நடைபெறுவதற்கு துணைவேந்தரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள குழுவினர், இந்த நேரத்தில் துணைவேந்தரை சந்திக்க ஆளுநர் வருகை தருவது முறையல்ல என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்

Tags:    

மேலும் செய்திகள்