துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பளித்த வேலூர் துணை மேயர் சுனில் குமார்
துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பளித்த வேலூர் துணை மேயர் சுனில் குமார்
அரசு மற்றும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக காட்பாடியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, வேலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் சுனில் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், காட்பாடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சருக்கு, சுனில் குமார் மாலை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.