சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் நேர்ந்த கதி...இரவில் துடிதுடித்து இளைஞர் பலி

Update: 2024-11-07 02:55 GMT

வேளாங்கண்ணி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குபொய்கைநல்லூர் வீரன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர்

ராஜேஷ். 20 வயதான இவர் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிகாக சுடுகாட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜேசுக்கும் அதேபகுதியை சேர்ந்த மகாகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அன்று இரவு வீரன்குடிகாடு எல்லை ரோட்டில் ராஜேஷ் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த மகாகுமார் மற்றும் சிலர் சேர்ந்து ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ராஜேஷ் தந்தை சேகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர்களை பிடிக்க முயன்றபோது, கீழ விழுந்ததில் மகாகுமாருக்கு இடது காலிலும், ஆகாசுக்கு வலது காலிலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்