வைகை அணையில் இருந்து பூர்வீக பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.

Update: 2024-11-18 10:11 GMT

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசன வசதிக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர், பார்த்திபனூர் மதகணையை வந்தடைந்தது. இந்நிலையில், பெரிய கண்மாய் உள்ளிட்ட உதிரி கண்மாய்களை நிரப்புவதற்காக காருகுடி மதகணைக்கு வைகை தண்ணீர் வந்தடைந்தது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 67 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்