துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி நிலவுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத அளவிற்கு மாநில பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் விளைவாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா செய்துள்ளதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். மாநில அரசின் பொதுநிதி மூலமாக பல்கலைக்கழகங்கள் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.