திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தில், எம்.பி. துரை வைகோ, பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கயிறு இழுத்தல், பானை உடைக்கும் போட்டி நடைபெற்ற நிலையில், பானை உடைக்கும் போட்டிக்கு மதிமுக எம்.பி. துரை வைகோ கண்ணில் காவி நிற துண்டு கட்டப்பட்டது. உடனே இதனை கவனித்த எம்.பி. அருண் நேரு, காவி நிறத்திற்கு பதிலாக பச்சை நிற துண்டை மாற்றக்கூறியது கவனம் பெற்றது. பின்னர், பச்சை துண்டை கண்ணில் கட்டியப்படி எம்.பி. துரை வைகோ பானையை உடைத்தார்.