இந்து கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் மூன்றும் ஒரே இடத்தில்.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மக்கள்
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட 3,000 பேர் பங்கேற்றனர். பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் மூன்று மதத்தினரும் வந்து வழிபாடு நடத்துவதற்கான இந்து கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் என மூன்றும் ஒரே இடத்தில் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அதனை ஏற்ற அமைச்சர் நேரு, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.