திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் படித்த 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவு வெளிவந்து 50 நாட்கள் ஆகியும், மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், பட்டப்படிப்பு தகுதியின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களால், வேலைக்கு சேர முடியவில்லை. அதேபோல், உயர்கல்வியில் சேர தகுதி பெற்ற மாணவர்கள் தற்காலிகப் பட்டச் சான்று இல்லாததால் அந்த இடத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஒரு லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வத்திடம் கேட்ட போது, 15 நாட்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்...