"தமிழகமே வெட்கப்படணும் வேதனைப்படனும்..சென்னை மாணவி வன்கொடுமை..ரத்தம் கொதித்து பேசிய ஜெயக்குமார்
அண்ணா பல்கலைக்கழக வாயில் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தர தரவென இழுத்து சென்று கைது செய்தனர்.. காந்தி மண்டபம் வாயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போதே அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை அருகே நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அதிமுகவினர் சமூக நல கூடத்திலும், திருமண மண்டபத்திலும் அடைக்கப்பட்டனர். அதிமுக கண்டன ஆர்பாட்டம் காரணமாக சந்தார் வல்லபாய் படேல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.