போக்குவரத்து தீவுக்கு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பெயர் | K. Balachander
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போக்குவரத்து தீவு, "இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்து தீவு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் குடும்பத்தினர், திரைத்துறையினர், திமுக எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.