செய்ய கூடாததை செய்த தாய்... `நடுரோட்டில்'... 2 குழந்தைகள் சொன்னதை கேட்டு... அதிர்ந்த போலீசார்...

Update: 2024-12-10 16:07 GMT

செய்ய கூடாததை செய்த தாய்... `நடுரோட்டில்'... 2 குழந்தைகள் சொன்னதை கேட்டு... அதிர்ந்த போலீசார்...

#TNPolice #Mother #Dharmapuri

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

வளாகத்தில் உள்ள டீக்கடை அருகே 2

குழந்தைகள் நீண்ட நேரமாக தனியாக சுற்றி திரிந்துள்ளன. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர்

சந்தேகம் அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டதில் அக்குழந்தைகள் ஏரியூர் பகுதியை சேர்ந்த ராகவ ஸ்ரீ, முகேஸ்

என்பது தெரியவந்தது.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில்

அக்குழந்தைகளை தாய் நந்தினி தனியே விட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்களை வரவழைத்து போலீசார் 2 குழந்தைகளையும் பத்திரமாக ஒப்படைத்தனர். கணவருடன்

ஏற்பட்ட தகராறு காரணமாக நந்தினி

குழந்தைகளை விட்டு சென்று உறவினர்கள் தெரிவித்ததையடுத்து அப்பெண்ணுக்கு

ஆலோசனை வழங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்