போனஸ் வழங்க G.O. - பாஸ் செய்த தமிழக அரசு

Update: 2025-01-11 09:41 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 2024-ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ல், 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாயும், 151 நாட்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 195 ரூபாயும் ஊக்கத்தொகையாக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், 91 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் ஊக்க தொகையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் என போக்குவரத்து துறை குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்