"நடு ரோட்டுல கெத்தா காட்டுறீங்க ராசா... வரிசையா வாங்க" மாஸ் காட்டிய அதே இடத்தில் பல்பு
தூத்துக்குடியில் தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகை மூட்டம் ஏற்படும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை உபயோகித்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறையினர்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ளது வ உ சி கலைக்கல்லூரி இந்த கல்லூரியில் பொங்கல் விழா இன்று கல்லூரி மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது இதற்காக ஒரே உடையில் வந்திருந்த கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பொங்கல் பண்டிகை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வெளியே வந்த நிலையில் கல்லூரி முன்பு கூட்டமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையிலும் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர் மேலும் தங்கள் இருசக்கர வாகனத்தில் பொருத்தியுள்ள அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்கள் மூலம் ஓலி எழுப்பினர் இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது இதன் காரணமாக அந்தப் பகுதி வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு போக்குவரத்து காவல்துறையினர் வந்து இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பிடிக்க முயன்றனர் அப்போது சிலர் பைக்கில் இருந்து அப்படியே தப்பி ஓடினர் இருப்பினும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களின் வண்டிகளை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாகசத்தில் ஈடுபட்டதற்காகவும் அதிக சத்தம் மற்றும் புகையெழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தியதற்காக அபராதத்தையும் விதித்தனர். தூத்துக்குடியில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.