கனமழையால் சென்னையில் பிரதான சாலையான தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது... வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்... மழைநீர் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்கள் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணம் செய்தனர்... வாகனங்களும் குறைந்த வேகத்தில் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...