மேனேஜரை கொல்ல தந்தை, மகன் செய்த பகீர் காரியம் - சென்னை அருகே அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையின் மேலாளரை சுட்டு கொல்ல, நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த வடமாநில தொழிலாளி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக மேலாளர் ஜெரீஷ் ஆனந்தை சுட்டுக் கொல்ல சுனில் குமார் என்ற வடமாநில தொழிலாளி நாட்டுக் துப்பாக்கியுடன் வந்தார். பின்னர் அவரின் தந்தை உபேந்திரா மாத்தோவிடம் துப்பாக்கியை கொடுத்து விட்டு தலைமறைவானார். இருவரையும் அடுத்தடுத்து கைது செய்த போலீசார்,
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.