விழுப்புரம் - வேலூர் ரூட்டில் தில்லுமுல்லு.. 3 ரயில்வே அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
விழுப்புரம் - வேலூர் அகல ரயில் பாதை பணிக்காக மேஜை, நாற்காலிகள் உள்பட பொருள்கள் வாங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் 2011ம் ஆண்டு வரை, விழுப்புரம் வேலூரில் அகல ரயில் பாதை பணியில் முதுநிலை வணிக மேலாளராக இருந்த முத்துராமலிங்கம், மண்டல மெட்டீரியல் மேலாளர் சீனிவாசன், ஸ்டோர் கீப்பர் இன்பராஜன் ஆகியோருக்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.