திருச்செந்தூரில் சித்து விளையாட்டு.. கடலுக்குள் தெரிந்த தண்டவாளம்?

Update: 2025-03-26 04:12 GMT

திருச்செந்தூரில், சமீப காலமாக கடலானது பல்வேறு ஆச்சரியங்களை வெளிக் கொண்டு வருகிறது. அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்கும் கடலில் இருந்து விசித்திரங்கள் தென்படுகின்றன. தற்போது அய்யா கோயில் அருகே வெளியே தெரியும் பாசி படர்ந்த பாறைகள், ரயில் தண்டவாளம் போல் இருப்பதாக பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மிகவும் நேர்த்தியாக உள்ள இந்த பாறையானது, திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள துறைமுகத்திற்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சாலையாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், திசையன்விளைக்கு ரயில் போக்குவரத்து இருந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்