புது Oppo போனுக்குள் பழைய நோக்கியா பேட்டரி..! வடமாநில தொழிலாளி பலே ஐடியா..! வெளியான அதிர்ச்சி வீடியோ
திருப்பூரில், இந்தியா முழுவதும் இருந்து புலம்பெயர்ந்து பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர், சொந்த ஊருக்கு செல்ல பணம் தேவைப்படுவதாக கூறி, தங்களிடம் இருக்கும் விலையுயர்ந்த செல்போன்களை குறைந்த விலையில் விற்று விடுவதாக கூறப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாய் செல்போன் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிடைப்பதாக கூறி சக தொழிலாளர்களும் வாங்கி விடுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த செல்போன்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. புது oppo போனுக்குள் பழைய நோக்கியா பேட்டரியை வைத்தும், கேமிரா பெயரில் வெறும் கண்ணாடியை வைத்தும் ஏமாற்றியிருப்பது அம்பலமாகி இருக்கிறது. செல்போனை வாங்கி ஏமாந்த வடமாநில தொழிலாளி ஒருவர் கைதவறி செல்போனை கீழே போட்டு உடைத்த நிலையில், அதனை சரி செய்ய கடைக்கு சென்றபோது இந்த மோசடி தெரியவர, இது குறித்தான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.