திருப்பூரில் பரபரப்பான சாலையில் இளைஞர்கள் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் மக்கள் பீதியடைந்தனர். புஷ்பா பேருந்து நிறுத்தம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கற்களை வீசி மாறி மாறி தாக்கியதால், குடிபோதையில் இருந்த நபரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தொடர்ந்து அந்த நபர் சாலையின் நடுவே கற்களை தூக்கிக்கொண்டு நடமாடியதால் மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.