காட்டுக்கு அழைத்த அப்பா.. துணைக்கு சென்ற 15 வயது மகனும் பலி..

Update: 2024-09-23 05:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அடுத்துள்ள ஏலகிரி மலையடிவாரத்தில், வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற மூவருக்குதான் இந்த துயரம்...

தந்தையுடன் வேட்டைக்கு சென்ற 15 வயது சிறுவன் - இருவரும் பலி

தங்களின் நாட்டுத் துப்பாக்கிக்கு வன விலங்குகளை இரையாக்க சென்ற மூவர், அங்கு ஏற்கனவே காட்டுப்பன்றி வேட்டைக்கு மர்மநபர்களால் வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்...

சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவர், தன் 15 வயது மகனான லோகேஷ் மற்றும் 65 வயது முதியவரான கரிபிரான் என்பவருடன் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற இடத்தில்தான் இந்த கோரம்...

காட்டுப் பன்றியை வேட்டையாட வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பலி

நிலத்தின் மேற்பரப்பில் மர்மநபர்களால் வைக்கப்பட்டிருந்த மின்வேலியால், மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உட்பட மூவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்...

விவசாய நிலத்திக்ல் சட்டவிரோதமாக மின்வேலி - ஒருவர் கைது

விசாரணையில், முருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த நீதி என்பவர், சட்டோவிரோதமாக காட்டு பன்றியை வேட்டையாட மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்தது..

சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், மூவரின் சடலங்களையும், சம்பவ இடத்தில் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் கைப்பற்றிய நிலையில், உயிர் பலிக்கு காரணமான நீதியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்