செக் மோசடி வழக்கு..! காவலருக்கு அதிரடி தீர்ப்பு கொடுத்த நீதிபதி | Tirunelveli
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் அசோகன் மீது ஜான் போஸ்கோ என்பவர் 4 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த வள்ளியூர் நீதிமன்ற நீதிபதி ஆன்ஸ் ராஜா, காவலர் அசோகனுக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக நான்கு மாதம் சிறை தண்டனையும் விதித்துள்ளார்.