"உடல்நிலை சரியில்லாமல் உயிர் போனால் யார் பொறுப்பு" - கண்ணீரோடு கதறும் மாஞ்சோலை மக்கள் | Tirunelveli
- நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அங்கு குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்தது போல, எங்கள் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வேதனை உடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்..