ரயில் ஏறியவர் மனைவி, 7 மாத குழந்தையோடு ரயிலுக்கு அடியே விழுந்த பயங்கரம்...ஐயோ ஐயோ என அலறிய பயணிகள்

Update: 2024-11-15 08:46 GMT

திருச்செந்தூர் போக ரயில் ஏறியவர் மனைவி, 7 மாத குழந்தையோடு ரயிலுக்கு அடியே விழுந்த பயங்கரம்...ஐயோ ஐயோ என அலறிய பயணிகள் - கடைசியில் நிகழ்ந்த அதிசயம்

திண்டிவனம் ரயில் நிலையத்தில், திடீரென முன்கூட்டியே புறப்பட்ட ரயிலில், 7 மாத கைக் குழந்தையுடன் தம்பதி தண்டவாளத்தில் விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரயில் நிலையமே இரவில் களேபரமான இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு இரவில் வந்து நின்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், திடீரென முன்கூட்டியே புறப்பட்டதில்தான் இந்த களேபரம்...சம்பவத்தை சாதாரணமாக கடந்து போக முடியாத நிலைமைக்கு ஆளாகி பதற்றத்தில் உறைந்து போன பயணிகள், ரயிலின் அபாயச் சங்கிலியை உடனே இழுத்து நிறுத்தியதில் மூவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர்...

ரயில் திடீரென புறப்பட்டதில், திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோமதி மற்றும் மணிகண்டன், தங்களின் ஏழு மாத கைக்குழந்தையுடன் கால் இடறி ரயிலுக்கு அடியில் விழுந்தது அனைவரையும் பதற வைத்திருக்கிறது...

ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய மக்கள், மூவரையும் மீட்டு ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் வழியில் பேராபத்தில் சிக்கி உயிர் தப்பிய மூவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்