அன்று திருச்செந்தூர் யானையால் உயிரிழந்த பாகன் - இன்று பாகன் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் நம்பிக்கை

Update: 2024-12-07 11:00 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, கடந்த மாதம் 18-ம் தேதி தாக்கியதில், யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் கோயில் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், பாகன் உதயகுமாரின் மனைவி ரம்யா மற்றும் அவரது மகளை, தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் திருச்செந்தூர் கோவில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, யானைப் பாகன் உதயகுமார் குழந்தைகளின் கல்விக்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்