திண்டாடும் பாரம்பரிய கலை.. "தீபாவளி தான் சேல்ஸ்.. ஆனா இப்போ பரிதாப நிலையில் கலைஞர்கள்

Update: 2024-10-26 09:54 GMT

நாடெங்கும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிவிட்டது. ஆனால், அதிகரித்து விட்ட ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தாலும், ரெடிமேட் ஜவுளிக்கடைகளின் அபரிமிதமான வளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டு இருப்பது என்னவோ.. நாங்கள் தான்.. என்கிறார்கள், தையல் கலைஞர்கள்.

தூத்துக்குடியில் உள்ள தையல் கலைஞர்கள் தங்களுக்கு வந்துள்ள ஆர்டர்களை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களிடம் தைக்க வருபவர்கள் பெரும்பாலும் 40- வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

பெருகிவிட்ட ரெடிமேட் ஜவுளிக்கடைகளாலும், அதில் வெளியாகும் அதிரடி ஆஃபர்களாலும், ஆட்டம் கண்டுவருகிறது, தையல் தொழில்...

விரும்பிய டிசைன்களில் ஃபிட்டான ட்ரஸ் என, போட்டா.. போட்டிக்கொண்டு தைத்து வந்த நிலையில், ஆரம்பத்தில் விலை மலிவாகவும், ஆஃபரில் வந்த ஆடைகளின் பக்கம் பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பே, தையல் கலைஞர்களின் கவலைக்கு காரணமாகும்..

இதனால், தையல் கூலியையும் அதிகரிக்க முடியாமல் இத்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்..

எத்தனையோ.. மாடர்ன் கலாச்சாரம் வந்தபோதும்.. புடவை கட்டும் பெண்கள் மட்டும் இன்னமும், சேலைக்கு ஏற்ற ப்ளவுஸ்கள் தைப்பதற்காகவே, இந்த தையல் காரர்களிடம் வருகின்றனர்..

பண்டிகை காலங்களில் அவ்வப்போது ஏற்படும்.. மின் தடை, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவைகளால் தங்களது தொழில் மிகவும் பாதிக்கப்படுவதாக இக்கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், இத்தொழிலுக்கு இளம்தலைமுறையினர் யாரும் வர விரும்புவதில்லை என கவலையில் உள்ளனர்..

தற்போது இருக்கும், தையல் கலைஞர்களின் மூலம் தையல் தொழிலை காப்பாற்றுவதற்கு, தங்களுக்கு மானிய உதவி செய்வதோடு, மின்கட்டணத்தில் சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்