தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு செல்கிறார். இன்று மாலை 4.50க்கு தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை திறந்து வைக்கிறார். திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கும் மாதம் 1,000 வழங்கப்படவுள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 75 ஆயிரத்து 28 மாணவியர் வங்கிக் கணக்கில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தப்படும் என, அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.