ஆருத்ரா தரிசனம்... நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் - தமிழகமெங்கும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்

Update: 2025-01-13 11:16 GMT

தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு 32 திரவியங்களில் அபிஷேக ஆராதனையுடன் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாதர் சாமி திருக்கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதே போல் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் கோலாகலமாக நடந்த திருவாதிரை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் மரகதலிங்கம் தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்