சென்னை ஹாஸ்பிடலில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை இளைஞர்

Update: 2025-01-13 14:04 GMT

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 50 வயது மதிப்புடைய பெண் ஒருவர் சிறுநீரகம் மற்றும் இருதய பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். வார்டில் அவர் படுத்துக்கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அவர் கூச்சலிட்டதை கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்