ஹைதராபாத் கிளம்பும் பெருமாள் - தங்க நகையால் ஜொலிக்கும் 12 அடி சிலை | Thiruvarur

Update: 2025-01-08 02:19 GMT

ஹைதராபாத்தில் இருந்து திருவாரூர் வந்த 12 அடி உயரம் கொண்ட திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பெருமாள் சிலை, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பூட்டப்பட்டு மீண்டும் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருவாரூரில் செயல்பட்டு வரும் கடவுள் ஆபரணம் செய்யும் தொழிலகத்திற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த சிலை வந்துள்ளது.‌ இந்த பெருமாள் சிலைக்கு திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற ஆபரணங்கள் கடந்த ஏழு மாதங்களாக செய்யப்பட்ட நிலையில், ஹைதராபாத் கொண்டு செல்லப்படும் இந்த சிலை வைகுண்ட ஏகாதசி அன்று பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்