காதலன் பற்றி தெரிய வந்த உண்மை... IT பெண் எடுத்த விபரீத முடிவு - சென்னையில் ஷாக்
சென்னையில், திருமணமானதை மறைத்து காதலன் ஏமாற்றியதால், விரக்தியடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை போரூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி, சுமார் 2 லட்சம் வரை பிரகாஷ் பணம் பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்த பிரகாஷ், கடந்த 31-ம் தேதி தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண், வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பிரகாஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக அப்பெண் மரண வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், 3 பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார் காதலன் பிரகாஷை கைது செய்தனர்.