தனியார் பள்ளியில் பாலியல் சீண்டல் விவகாரம்... நேர்ந்த குட் டச்.. பேட் டச்-களை சொன்ன மாணவிகள்

Update: 2024-11-16 02:33 GMT

திருவண்ணாமலை காந்தி நகரில் தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் மீது பாலியல் சீண்டல் புகார் கொடுக்கப்பட்டதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திநகர் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, ஆசிரியர்கள் தங்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாக மாணவிகள் தெரிவித்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி செல்வி போலீசுக்கு புகார் தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், விவகாரத்தை மூடி மறைக்க தனியார் பள்ளி முயற்சி செய்வதாகவும், மகளிர் போலீஸ் தாமதம் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டன. இதனை காவல்துறை மறுத்துள்ளது. விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை நகர காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், தங்களுக்கு மனு அளிக்கப்பட்ட 11 ஆம் தேதியே வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், காவல்துறை குழு விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தங்களுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் குட் டச், பேட் டச் நிகழ்ந்ததை மாணவிகள் தெரிவித்திருப்பதாக தங்களுக்கு புகார் வந்ததாக தெரிவித்த அவர், போஸ்கோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்