திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக விலகி இருந்த இளம்பெண்ணை மீண்டும் காதலிக்க வற்புறுத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன், உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் போலீஸ் அகாடமியில் படித்து வந்த சக்திவேலும், ரோஷிணியும் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ரோஷிணி பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அவரை சந்தித்து மீண்டும் காதலிக்க வற்புறுத்திய சக்திவேல், அவரை கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளார். இதுகுறித்து ரோஷினியிடம் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.