சித்ரா பௌர்ணமி கிரிவலம்..எங்கு பார்த்தாலும் மக்களின் தலை..திரும்பி செல்ல இல்லாத பேருந்துகள் - கொந்தளித்து பேசிய மக்கள்

Update: 2024-04-24 09:52 GMT

திருவண்ணாமலையில், சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் வந்தவர்கள், சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் ஆங்காங்கே சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 2 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும் மாவட்ட நிர்வாகம் கணித்ததை விட அதிகமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டுள்ள நிலையில், கிரிவலம் முடிந்து புறவழிச் சாலைகளில் பொதுமக்கள் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் ஆங்காங்கே திருவண்ணாமலைக்கு வரும் பேருந்துகளை சிறைபிடித்து முண்டியடித்து ஏற முயன்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் பொதுமக்கள் பல இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... அதுமட்டுமல்லாது தங்கள் சொந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் செல்ல ரயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்