3 மாதங்களுக்கு பின்.. தோண்டி எடுக்கப்பட்ட உடல் | Thiruvallur | Thanthi TV
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்று மாதங்களுக்கு முன்னர் குடியிருப்பு பகுதி பூங்காவில் புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடல் நீதிமன்ற உத்தரவின்படி, தோண்டி எடுக்கப்பட்டது.
கெட்னமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ராம்குமார் என்பவரது தாயாரான மூதாட்டி கனகாமுஜம் கடந்த ஜூலை மாதம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது உடலை அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் புதைக்க கெட்டனமல்லி கிராம மக்கள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து , குடியிருப்பு பகுதியான உள்ள பூங்காவில் மூதாட்டியின் உடல் புதைக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மூதாட்டியின் உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது