மாணவிகளுக்கு மது கொடுத்து அத்துமீறிய ஆசிரியர்..பிரபல பள்ளியில் அதிர்ச்சி.- திருச்செந்தூரில் பரபரப்பு
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் தனியார் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியரைத் தொடர்ந்து பள்ளி முதல்வரும், செயலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறிய நிலையில், 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதற்கிடையில் கோவையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை கோவை மாவட்ட போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளியின் முதல்வர் சார்லஸ் சுவீட்லி மற்றும் பள்ளி செயலர் செய்யது அகமது ஆகிய இருவரையும் கைது செய்து திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். திருச்செந்தூரில் இருந்து தனிப்படை போலீசார் பொன்சிங்கை அழைத்து வரும் நிலையில் மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.