விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடற்கரை, நாழிக்கிணறு, வள்ளி குகை போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அதிகளவிலான பக்தர்களின் வருகையால், இலவச தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோருக்கு வழி என அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், 4 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, கடலில் புனித நீராடிய சேலத்தை சேர்ந்த பெண் பக்தருக்கு கால் முறிவு ஏற்பட்டதையடுத்து, பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.