'திடீர் நகர்' மக்களின் 'திடீர்' போராட்டம்.. - போலீசாரை தள்ளிவிட்டு சென்ற பெண்கள் ..- பரபரப்பு காட்சி

Update: 2024-09-23 13:12 GMT

சென்னையில் திடீர் நகர் மக்களின் திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

பெரியமேடு கண்ணப்பர் திடலில் வீடற்றோர் காப்பகத்தில் வசித்த 114 குடும்பத்தினருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். அமைச்சர் உதயநிதி புறப்பட்டுச் சென்ற நில நிமிடங்களில் அப்பகுதியில் குவிந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள், உண்மையான கண்ணப்பர் திடல் மக்களான தங்களுக்கு வீடுகளை வழங்காமல் சைதாம்ஸ் சாலைப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்கியுள்ளதாகக் கூறி மறியலில் ஈடுபட முயன்றனர்... கண்ணப்பர் திடலில் 'திடீர் நகர் ' மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடியாதவாறு போலீசார் தடுக்க முயன்ற நிலையில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது... காவல்துறையினரை தள்ளிவிட்டு சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போது

பேருந்தில் ஏறிய பெண்கள் திடீர் நகர் மக்கள் அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றால் தான் தாங்கள் பேருந்தில் வருவோம் என்று கூறி காவல்துறையினரைத் தள்ளியபடி பேருந்துகளை விட்டு இறங்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளிடம் கேட்டபொழுது , முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினர். முதல்கட்டமாக தற்போது காப்பகங்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப் படுவதாகவும் , திடீர் நகர் பகுதியில் சிறிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு வரும் நாட்களில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்