தேவர் குருபூஜையில் உலுக்கிய மரணம் .. ADGP, IG, SP வரை நேரில் வந்து.. 21 குண்டுகள் முழங்க அடக்கம்

Update: 2024-11-01 06:47 GMT

தேவர் குருபூஜையில் உலுக்கிய மரணம் .. ADGP, IG, SP வரை நேரில் வந்து.. 21 குண்டுகள் முழங்க அடக்கம்

ராமநாதபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியின் போது, உயிரிழந்த எஸ்ஐ சரவணனின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.. பார்க்கலாம்.. விரிவாக..

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவரது தலைமையில், பரமக்குடி நகர் பகுதியில் தேவர் ஜெயந்தியை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்..

அப்போது சரவணன், பரமக்குடி ரவி தியேட்டர் எதிரே இருந்த சில கொடிக்கம்பங்களை அகற்றி இருக்கிறார்.. இதில், அருகில் இருந்த மின்சார கம்பிகள் மீது கொடிக்கம்பம் உரசியதில், எஸ்ஐ சரவணன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்..

இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த ஊரான கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்திற்கு அடக்கம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது.

அங்கு எஸ்ஐ சரவணனின் உடலைக் கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் மனதை ரணமாக்கி இருக்கிறது..

இந்த சம்பவம் அங்கிருந்த மனதை உறைய வைத்திருக்கிறது. சம்பவ இடத்தில் சரவணின் ஊர் மக்களும், உறவினர்களும், ஏராளமான போலீசாரும் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்..

அவரது உடலுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, டிஐஜி அபினவ் குமார், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து, உயிரிழந்த சரவணனின் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது..

உயிரிழந்த சரவணனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றை வயது பெண் கைக்குழந்தையும் உள்ளனர்..

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்த எஸ்ஐ சரவணன் கிராமம் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்