28 வீடுகளை பதம் பார்த்தும் அடங்காத புல்லட் யானை... ஒவ்வொரு இரவை பயத்தில் கடக்கும் மக்கள்

Update: 2024-12-19 08:52 GMT

28 வீடுகளை பதம் பார்த்தும் அடங்காத புல்லட் யானை... ஒவ்வொரு இரவை பயத்தில் கடக்கும் மக்கள் - திக் திக் நிமிடங்களை பகிர்ந்த மக்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் ஒரே வாரத்தில் புல்லட் காட்டு யானை 28 வீடுகளை சூறையாடிய நிலையில், ஊர்மக்களுடன் எம்.எல்.ஏவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் புல்லட் என்று அழைக்கப்படும் காட்டு யானை வீடுகளை துவம்சம் செய்து வருகிறது... நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அந்த யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி பந்தலூர் அருகே குறிஞ்சி நகர், படச்சேரி கிராமத்துக்குள் புகுந்து அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்பில் உள்ள வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. புல்லட் யானை தாக்குதலில் இருந்து பொதுமக்கள் உயிர் பிழைப்பதே பெரும்பாடாக உள்ள நிலையில், 2 கிராம மக்கள், பள்ளிகல்லூரி மாணவர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். வனத்துறையினர் யானையை பிடிக்க மெத்தனம் காட்டுவதாக கூறி பொதுமக்கள் போராடி வரும் சூழலில் அவர்களுடன் கூடலூர் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலனும் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்