மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை.. ஆசிரியரை பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே இழுத்து சென்ற போலீசார்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ள மலர் செல்வத்திற்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இவர் கடந்த கல்வி ஆண்டில் பயின்ற 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்
தொல்லை கொடுத்துள்ளார்... அந்த மாணவி இப்போது சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் நிலையில் கடந்த 15ம் தேதி வயிற்று வலி காரணமாக சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில்
இன்று பள்ளியில் வகுப்பு எடுத்து கொண்டிருந்த ஆசிரியர் மலர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்... முதல் கட்ட விசாரணையில்
அந்த மாணவியை பல முறை தனது ஆய்வு கூடத்தில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது... வெளியில் சொன்னால் செய்முறை தேர்வு மதிப்பெண்ணைக் குறைத்து விடுவதாக மிரட்டியுள்ளார்... மலர் செல்வம் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் வேறு யாரேனும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.