திண்டுக்கல் மூலச்சத்திரத்தில் சட்டவிரோதமாக வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து போயின... ரூபன் என்பவர் ரிச்சி கார்ஸ் என்ற பெயரில் கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் நடத்தி வந்த நிலையில் தொழில் சுணக்கத்தால் தனது கார் குடோனை முஸ்தாக்கிற்கு வாடகைக்கு விட்டுள்ளார்... அந்த குடோனில் சட்ட விரோதமாக பாறைகளை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் வெடி மருந்து பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர். நள்ளிரவில் வெடிமருந்து தீப்பிடித்து கார் குடோன் முழுக்க தீயில் கருகி சாம்பலானது... கார்கள், இரு சக்கர வாகனங்கள் எரிந்து போயின... தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் ரியாஸ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.